கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு: போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
திருவாரூர் அருகே கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே காணூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விளை நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதித்து வந்தது. அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கெயில் நிறுவனம் மீண்டும் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கெயில் நிறுவனத்திற்கு எதிராக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் அடியக்கமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். அப்போது சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட்மைப்பு முக்கிய நிர்வாகிகள் நவாஸ், ராஜபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் போலீசாரின் நடவடிக்கையால் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருந்த அதே நேரத்தில் காணூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் காணூர் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story