காவிரி நதிநீர் மீட்பு விழாவை கொண்டாடுவதற்கு தகுதியான கட்சி அ.தி.மு.க. மட்டும் தான் அமைச்சர் பேச்சு
காவிரிநதி நீர் மீட்பு விழாவை கொண்டாடுவதற்கு தகுதியான கட்சி அ.தி.மு.க. மட்டும் தான் என லேணாவிலக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம் லேணாவிலக்கில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நிதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமு, பழனியான்டி முன்னிலை வகித்தனர். இதில் செந்தில்நாதன் எம்.பி., மாவட்ட செயலாளர் வைரமுத்து, சிவகங்கை மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, தலைமை கழக பேச்சாளர்கள் நாகை பன்னீர்செல்வம், மேலூர் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நீரை ஜெயலலிதா சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். தற்போது காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு தகுதியான கட்சி அ.தி.மு.க. மட்டும் தான். ஜெயலலிதா வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து சிறப்பான ஆட்சி நடத்தி வருகின்றனர்“. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரன் வரவேற்றார். முடிவில் சிமெண்டு பிரிவு மாநில செயலாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.

Related Tags :
Next Story