நெல்லையில் ஓடும் பஸ்சில் துணிகரம் பர்தா அணிந்து வந்து திருட முயன்ற 2 பெண்கள் சிக்கினர்
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஓடும் பஸ்சில் திருட முயன்ற பர்தா அணிந்த 2 பெண்கள் சிக்கினார்கள்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஓடும் பஸ்சில் திருட முயன்ற பர்தா அணிந்த 2 பெண்கள் சிக்கினார்கள்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம்நெல்லை சந்திப்பு பஸ் நிலையதுக்கு தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று காலை நெல்லை டவுனுக்கு செல்லும் பஸ்நிறுத்தத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை நோட்டமிட்ட பர்தா அணிந்த 2 பெண்கள் கூட்டத்தோடு, கூட்டமாக பஸ்சில் ஏறிக்கொண்டனர்.
பஸ் சிறிது தூரம் சென்ற போது, அவர்கள் பஸ்சில் நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அந்த பெண்களை மடக்கி பிடித்தனர்.
பர்தா அணிந்த பெண்கள்தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு பஸ்நிலைய புறக்காவல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பர்தா அணிந்து 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் நரிக்குறவர் காலனி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த இசக்கியம்மாள் (வயது 25), முனியம்மாள் (30) என்பது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் புறகாவல் நிலைய போலீசார், நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.