மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; விவசாயி பலி - நண்பர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; விவசாயி பலி - நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:45 AM IST (Updated: 24 Jun 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பருத்தியூர் சாலை தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பல்லவராஜன் (வயது 30). இவருடைய நண்பர் பருத்தியூர் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் குரு(34). இருவரும் விவசாயிகள்.

இவர்கள் இருவரும் குடவாசலில் இருந்து பருத்தியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பல்லவராஜன் ஓட்டி சென்றார். வடவேர் பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அமிர்தவேலு, லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.

விவசாயி பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பல்லவராஜன், குரு ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி பல்லவராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குடவாசல் சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவர் அமிர்தவேலுவை தேடி வருகிறார்கள்.


Next Story