நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா


நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா
x
தினத்தந்தி 24 Jun 2018 2:30 AM IST (Updated: 24 Jun 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா நடந்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் உலக யோகா தின விழா நடந்தது.

பல்கலைக்கழகம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தலைமை தாங்கி பேசினார். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை தலைவர் சேது வரவேற்று பேசினார். சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் அண்ணாமலை யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார்.

தொடர்ந்து யோகாசன செய்முறை பயிற்சி வகுப்பு நடந்தது. பல்வேறு யோகாசனங்களை மாணவ-மாணவிகள் செய்தனர். பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குனர் வெள்ளியப்பன் நன்றி கூறினார்.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத்துறை சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை தாங்கினார். அண்ணாதுரை வரவேற்று பேசினார். யோகா பயிற்சியாளர்கள் அழகு ஆறுமுகம், கணேஷ், பாக்கியராஜ், ராம்ராஜ், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் பல்வேறு யோகாசன பயிற்சிகளை வழங்கினர்.

கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் நடராஜன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் அழகப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், பாலச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பழனிகுமார், உதவி நூலகர்கள் பாரதி, சந்தானசங்கர் ஆகியோர் செய்து இருந்தனர்.

தெற்கு விஜயநாராயணம்

தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியை கடற்படை தள கமாண்டிங் அதிகாரி விஷால் குப்தா தொடங்கி வைத்தார். அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த சந்திரன், வெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினர்.

நாங்குநேரி யூனியன் பட்டர்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியை டி.வி.எஸ். அதிகாரிகள் அந்தோணி தங்கராஜ், ராமலட்சுமி ஆகியோர் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி, ஆசிரியர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபமணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்து இருந்தனர்.

வீரவநல்லூர்

வீரவநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள கலையரங்கத்தில் முக்கூடல் பொதிகை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின விழா நடந்தது. ராஜன் வரவேற்று பேசினார்.

முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் வீரவநல்லூர் பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். பூமி பாலகன், டோமினிக் வின்சென்ட், வேல்முருகன், மனவளக்கலை மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பரமசிவம் நன்றி கூறினார்.

அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கடையம் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் யோகாசனங்களை செய்து காட்டினார்கள். மாணவர்களை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா ஆகியோர் பாராட்டினார்கள்.

பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார்கள். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் டேனியல், தேசிய மாணவர் படை ஆசிரியர் மெல்கி ஆகியோர் செய்து இருந்தனர்.

ஆவரைகுளம் பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியை பள்ளி செயலர் கணேசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்வமணி, உதவி தலைமை ஆசிரியர் அனந்த பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

Next Story