சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:07 AM IST (Updated: 24 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிராட்வே, 

தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் பிரதமர் மோடி பதவி விலகக்கோரியும், பா.ஜனதா ஆட்சி செய்யாத தமிழகத்தில் கவர்னரின் துஷ்பிரயோகத்தை கண்டித்தும் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமை தாங்கினார். இதில் த.மா.கா. மாநில துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் மூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நாகூர் கனி, நாம் தமிழர் கட்சி சார்பில் அன்புதென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Next Story