இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து, விபசாரத்தில் தள்ளிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து, விபசாரத்தில் தள்ளிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:08 AM IST (Updated: 24 Jun 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தானே,

இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து விபசாரத்தில் தள்ளிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.-

கடத்தி கற்பழிப்பு

மத்தியபிரதேச மாநிலம் குனா பகுதியை சேர்ந்தவர் சிவம் பன்வாரிலால் (வயது 24). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 17 வயது பெண்ணை நவிமும்பை, ஜூகு விலேஜ் பகுதிக்கு கடத்தி வந்தார். பின்னர் அவர் 4 மாதங்கள் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதையடுத்து அவர் இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சிவம் பன்வாரிலால், அவரது அக்காள் அர்ச்சனா மற்றும் நண்பர் சுனில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து, விபசாரத்தில் தள்ளிய சிவம் பன்வாரிலாலுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கியது. குற்றவாளியின் அக்காள் அர்ச்சனா மற்றும் நண்பர் சுனிலை விடுதலை செய்து உத்தரவிட்டது.

Next Story