நடிகர் விஜய் பிறந்த நாள் விழா ரசிகர்கள் நல உதவிகள் வழங்கி கொண்டாடினர்
நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நல உதவிகளை வழங்கி கொண்டாடினர்
கருப்பூர்,
நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி சேலம் அம்மாபேட்டை வள்ளலார் மடத்தில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
பின்னர் அம்மாபேட்டை காளியம்மன் கோவிலில் நடிகர் விஜய் பெயரிலும், அவர் நடித்த புதிய படமான சர்கார் படத்தின் பெயரிலும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகமும் நடந்தது. இதேபோல் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது.
மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை
மகுடஞ்சாவடி ஒன்றியம் இளம்பிள்ளை பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், பேனா, பென்சில், கல்வி உதவித்தொகை போன்ற நல உதவிகளையும், மன்ற உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளையும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமை தாங்கி வழங்கினார்.
மகுடஞ்சாவடி ஒன்றிய தலைவர் செந்தில், பகுதி தலைவர் செந்தில், ஜங்சன் நகர தலைவர் சக்தி, இடங்கணசாலை நகர தலைவர் பாலமுரளி, தெற்கு ஒன்றிய தலைவர் கோபி, எடப்பாடி ஒன்றிய தலைவர் கேசவன், நகர தலைவர் சக்திவேல், கொங்கணாபுரம் தலைவர் அசோகன், நங்கவள்ளி தலைவர் செல்வம், தாரமங்கலம் சுதாகர், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வெள்ளாளப்பட்டி, மாங்குப்பை, கொல்லப்பட்டி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story