சேலம் கிராஸ் டவுன் ஈட்டரி மாலில் புதிய கடைகள் திறப்பு விழா நடிகை நமீதா பங்கேற்பு
சேலம் கிராஸ் டவுன் ஈட்டரி மாலில் புதிய கடைகளை நடிகை நமீதா திறந்து வைத்தார்.
சேலம்,
சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் சேலம்-பெங்களூரு பைபாஸ் ரோட்டில் உள்ள தம்பி மாடர்ன் ஸ்பின்னிங் மில் வளாகத்தில் ‘கிராஸ் டவுன் ஈட்டரி‘ என்ற மால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் தந்தூரி டூ நைட் ஓட்டல், நேட்டிவ் ஸ்பெஷல், ஜெர்ரி அன் டாப், சிபோ எக்ஸ்பிரஸ் ஓட்டல், காபி ஷாப், திருப்பூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல், ஈட்டரி ஜூஸ் ஷாப், மசாலா பாப்கார்ன் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கடைகள் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கிராஸ் டவுன் ஈட்டரி மால் உரிமையாளர் ஜெகதீசன், அவருடைய மனைவி மாலதி ஜெகதீசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை நமீதா கலந்து கொண்டு ஒவ்வொரு கடையையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றினார்.
ரொம்ப பிடிக்கும்
இதையடுத்து அங்கிருந்த மேடையில் நடிகை நமீதா பேசும் போது, ‘சேலம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியதுடன் ‘தேங்ஸ் மச்சான்‘ என்றார். அதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகை நமீதாவை காண மால் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். இதையொட்டி சூரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திறப்பு விழா குறித்து கிராஸ் டவுன் ஈட்டரி மால் உரிமையாளர் ஜெகதீசன், மாலதி ஜெகதீசன் ஆகியோர் கூறும் போது, ‘சேலம் மாநகர மக்களுக்காக பிரத்யேகமாக ஒரே இடத்தில் சமையல் உலகம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் சதுரடியில் உள்ள கிராஸ் டவுன் ஈட்டரி மாலில் கடைகள் திறப்பு விழாவையொட்டி 3 நாட்கள் உணவு திருவிழா நடைபெறுகிறது‘ என்றனர்.
Related Tags :
Next Story