மேம்பாலத்தின் அடியில் கல்விச் சேவை
டெல்லியில் யமுனா காதர் என்ற பகுதியில் அமைந்திருக்கும் குடிசை பகுதியில் 8000-க்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லை.
நெடுஞ்சாலையை கடந்து சில கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். அந்த நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார் சத்யேந்திரா பால்.
23 வயது இளைஞரான இவர் கல்லூரி மாணவர். உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பாடவுன் பகுதியை சேர்ந்தவர். அங்கு 12-ம் வகுப்பு வரை படித்தவர் குடும்ப சூழ்நிலையால் சில ஆண்டுகள் படிப்பை தொடர முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். அங்கிருந்து பிழைப்புக்காக இவருடைய கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் டெல்லிக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள்.
அவர்களுடன் சத்யேந்திரா பாலும் வந்திருக்கிறார். தன்னை போலவே தன் பகுதியை சேர்ந்த குழந்தைகளும் படிப்பதற்கு வசதி இன்றி சிரமப்படுவதால் தானே ஆசிரியராக மாறிவிட்டார். அந்த பகுதியில் மேம்பால பணி நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ரெடிமேட் கான்கிரீட் சிலாப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவைகளையே சத்யேந்திரா பால் வகுப்பறையாக மாற்றி விட்டார். குடிசையில் வசிக்கும் குழந்தைகள் தினமும் ஆர்வமாக வந்து பாடம் படிக்கிறார்கள். அதற்காக அவர் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. ஒருசில பெற்றோர் கொடுக்கும் பணத்தை தன்னுடைய கல்லூரி படிப்புக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
‘‘குடும்ப சூழ்நிலையால் என்னால் படிப்பை தொடரமுடியவில்லை. என் குடும்பத்தினருடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கினேன். அந்த சமயத்தில் புத்தர் மற்றும் அம்பேத்காரின் போதனைகளை படித்தேன். அப்போதுதான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆக்ராவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என்பதால் அவர்களால் குழந்தைகளைப் பள்ளியில் விட்டு திரும்ப அழைத்துவர இயலாது. படிப்பை தொடரமுடியாமல் பாதியில் நிறுத்தியபோது நான் அனுபவித்த வேதனை இந்த குழந்தைகளுக்கு படிப்பை சொல்லிக்கொடுக்க தூண்டியது. குறைந்தபட்சம் அடிப்படை கல்வியையாவது கற்றுக் கொடுப்போம் என்ற எண்ணத்தில் களம் இறங்கி விட்டேன்’’ என்றார்.
சத்யேந்திரா 2016-ம் ஆண்டு முதல் பாடம் எடுத்து வருகிறார். அவருடைய முயற்சிக்கு அந்த பகுதியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் டேபிள், நாற்காலி, கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை வழங்கி குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story