ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி முடிவடைந்தது 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் வெளியேற்றம்


ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி முடிவடைந்தது 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 Jun 2018 3:00 AM IST (Updated: 25 Jun 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி முடிவடைந்து உள்ளது. 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி முடிவடைந்து உள்ளது. 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124 டன் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

கந்தக அமிலம்

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மாதம் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடப்பட்டது. அப்போது ஆலையில் கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு ரசாயனங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

பணி முடிந்தது

இந்த நிலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கந்தக அமிலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கடந்த 18–ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6 நாட்கள் இந்த பணி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 94 டேங்கர் லாரிகள் மூலம் 2 ஆயிரத்து 124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கன்டெய்னரின் அடிப்பகுதியில் சிறிதளவு கந்தக அமிலம் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் ஆலையில் உள்ள மற்ற அமிலங்கள், பொருட்கள் குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story