17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடன் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடன் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
ஈரோடு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பரணிதரன் (மாநகர்), எஸ்.ஆர்.செல்வம், சிறுபான்மை நலப்பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்டார்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
யார் இந்த டி.டி.வி.தினகரன்? என முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்கிறார். பழனிசாமி யாரால் முதல்-அமைச்சர் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சியில் இல்லாத என்னை, எங்கள் துணை பொதுசெயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் ஏன் மனு கொடுத்தீர்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் எனது ஜீப்பில் தொற்றிக்கொண்டு ஏன் ஓட்டுக் கேட்டீர்கள்? அ.தி.மு.க. எங்கள் வசம்தான் உள்ளது. இந்த ஆட்சி கலைந்தால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் வாங்குவதற்காக ரூ.150 கோடி செலவு செய்தீர்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலைச்சின்னம் வெற்றிச்சின்னமாக இருந்தது. இப்போது துரோகிகளிடம் அந்த சின்னம் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை நாமே தோற்கிறோமோ என்ற வருத்தம் என்னிடம் இருந்தது. இரட்டை இலை தோற்றால் தான் அதை நாம் மீட்க முடியும் என்பதற்காக தோற்கடித்தோம். இல்லையென்றால் உதய சூரியன் சின்னம் வெற்றி பெற்று இருக்கும். 8 வழி பசுமை சாலை திட்டத்தால் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர், விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்குகிறார்கள் என்று கூறி வருகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தீர்ப்பு தவறானது என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு உள்ளார்கள். நீதித்துறை மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. எனவே இந்த வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். மாறாக சபாநாயகர் தீர்ப்பு சரி என்று கோர்ட்டில் தீர்ப்பு வந்தால், அந்த தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் நின்று எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறுவார்கள். எனவே கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story