நெல்லிக்குப்பத்தில் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
நெல்லிக்குப்பத்தில் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் சரவணபுரத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 35). இவர் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷா(30). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். உஷா, தனது குழந்தைகளுடன் சரவணபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் உஷாவும், அவருடைய மூத்த மகள் ஸ்வேதாவும்(12) வாயில் நுரைதள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்தனர். இதை மற்ற 2 குழந்தைகளும் பார்த்து, அக்கம்பக்கத்தினரிடம் கூறினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சரவணபுரத்துக்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்று வரும் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக உஷாவும், ஸ்வேதாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதற்காக முதலில் உஷா, வீட்டில் இருந்த கொசுவர்த்தியை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். இதை பார்த்த ஸ்வேதாவும், அதனை குடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story