குறிஞ்சிப்பாடியில் 29-ந் தேதி நடைபெற உள்ள பா.ம.க. பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும், இளைஞரணி செயற்குழுவில் தீர்மானம்
குறிஞ்சிப்பாடியில் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள பா.ம.க. பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி தொகுதி பா.ம.க. இளைஞரணி செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.சி.மணி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர் மணி வரவேற்றார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், மாநில துணை அமைப்பு செயலாளர் பி.ஆர்.பி.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகாந்தி, ஒன்றிய செயலாளர் சுதாகர், மாநில மாணவர் சங்க துணை செயலாளர் ரத்தினவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட உழவர் பேரியக்க துணை தலைவர் கோகுலகிருஷ்ணன், குள்ளஞ்சாவடி முன்னாள் நகர செயலாளர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வினோத், தொழிற்சங்க தலைவர் சிவ.ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய நிர்வாகி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், குறிஞ்சிப்பாடியில் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள பா.ம.க. பொதுக்கூட்டத்தில் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். எனவே பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். முன்னதாக கடலூர் மாவட்ட எல்லையான கங்கணாங்குப்பத்தில் இருவருக்கும் இளைஞரணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பெருமாள் ஏரி கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரியை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பெருமாள் ஏரியை தூர்வார வேண்டும். குள்ளஞ்சாவடி கடைவீதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுப்பிரமணியபுரம் கிளை செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story