பழுதடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பாச்சூரில் பழுதடைந்து காணப்படும் டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்காக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சார வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பழுதடைந்துள்ளது. அதனால் மின்வாரிய அதிகாரிகள் வேறு ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சார வினியோகம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு வரும் மின்சாரமானது சில நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரமாகவும், சில நேரங்களில் உயர் அழுத்த மின்சாரமாகவும் மாறி மாறி வருகிது.
அவ்வாறு மாறி மாறி வருவதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி., மின்விசிறி போன்ற மின்சாதன பொருட்கள் பழுதடைகிறது. இந்த பகுதி மக்கள் தங்கள் பகுதியில் 6 மாதங்களாக பழுதடைந்து இருக்கும் டிரான்ஸ்பார்மரை சீரமைத்து தரவேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அவர்கள் இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து சீரான மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story