தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் இந்து முன்னணி மண்டல மாநாட்டில் தீர்மானம்


தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் இந்து முன்னணி மண்டல மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Jun 2018 2:30 AM IST (Updated: 25 Jun 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று இந்து முன்னணி மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கபுரம்,

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று இந்து முன்னணி மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெல்லை மண்டல மாநாடு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் இந்து முன்னணி நெல்லை மண்டலம் சார்பில் தமிழக பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது.

மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் அரசுராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாயக்கூத்தன், குற்றாலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பால் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

கடைகளை அகற்ற வேண்டும்

தமிழகத்தில் பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே காவல்துறையும், உளவுத்துறையும் சிறப்பாக செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான தகவல்களை தெரிவித்து தமிழகத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லையப்பர் கோவில் வளாகத்தின் உள்ளேயும், மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்களை மறைத்தும் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும். மேலும் கோவிலை சுற்றி உள்ள அசைவ உணவு கடைகளை அகற்ற வேண்டும்.

மத பிரசாரத்துக்கு தடை

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் கடவுள் வாழ்த்து பாடல் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதை கண்டிப்பது. தமிழகத்தில் மதபிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

பாபநாசம் கோவில், களக்காடு நம்பி கோவில் உள்ளிட்ட வனப்பகுதியில் ஆடி அமாவாசை உள்ளிட்ட விழா காலங்களிலும், மற்ற நாட்களிலும் இந்துக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகிறார்கள். தற்போது வனப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது. பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்கு பாதிப்பு ஏற்படாமல் வழிவகை செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வது. தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாநில தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் முருகானந்தம், இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபால், ஆறுமுகம், பெருமாள், செல்வகுமார், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணை தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Next Story