வில்லியனூரில் 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை, கவர்னர் அனுமதி


வில்லியனூரில் 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை, கவர்னர் அனுமதி
x
தினத்தந்தி 25 Jun 2018 4:00 AM IST (Updated: 25 Jun 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை கட்ட கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.

புதுச்சேரி,

50 படுக்கை வசதியுடன் ஆயுஷ் மருத்துவமனை கட்டுவதற்கு புதுவை அரசு முடிவு செய்துள்ளது. இந்த மருத்துவமனை முதலில் கோரிமேடு பகுதியில் அமையும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அதை ஏனாம் பகுதியில் கட்ட உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இதுபோன்ற தகவல்களால் புதுவையில் பிராந்திய ரீதியிலான பிரிவினை கருத்துகளும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே ஆயுஷ் மருத்துவமனையை கிராமப்புற பகுதிகளில் அமைக்கவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையை வில்லியனூரில் அமைக்க அரசு முடிவு செய்தது. இந்த மருத்துவ மனையை வில்லியனூரில் அமைக்க கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.

அதேபோல் அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை வாங்கியவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் விலக்கு அளிப்பது, புதுவை துறை முகத்தில் சரக்கு போக்குவரத்துக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட 13 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார். 

Next Story