கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் வெட்டிக்கொலை
கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள ஐ.டி.ஐ.யில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஐ.டி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள விடுதிக்கு பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவர், காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சதானா நகரைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பவருடைய மகன் சிவக்குமார் (வயது 22) என தெரிந்தது. அது சிவக்குமார்தான் என அவருடைய நண்பர் முருகன் என்பவரும் அடையாளம் காட்டினார். சிவக்குமார், ஐ.டி.ஐ.யில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்தார்.
பின்னர் சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்தது யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கொலையான மாணவர் சிவக்குமார், தினமும் வீட்டில் இருந்து ரெயில் மூலம் ஐ.டி.ஐ. வந்து சென்று உள்ளார். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமான மதுபான பாட்டில்கள் கிடந்தன.
எனவே நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கடைசியாக சிவக்குமார், கடந்த 22-ந் தேதி தனது நண்பர்களுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர் யாருடன் பேசினார்? என்பது குறித்து அவரது செல்போனில் பதிவான எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி.ஐ. மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது காதல் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி.ஐ. வளாகத்தில் மாணவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story