காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரிப்பு
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து அதிகரித்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை ஏலம் எடுத்தனர்.
திருவொற்றியூர்,
மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி, கடந்த 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. பைபர் படகுகளில் கடலில் சிறிது தூரம் சென்றே மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்கள் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்தது.
கடந்த 14-ந்தேதி நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையொட்டி மீனவர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் சிறிது தூரம் சென்று மீன்பிடித்தவர்கள் மற்றும் ஆழ்கடலில் மீன்பிடித்த ஒரு சில மீனவர்கள் ஓரிரு நாட்களில் கரை திரும்பினர்.
இதனால் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.
இந்தநிலையில் நடுக்கடலில் ஒரு வாரத்துக்கும் மேல் படகிலேயே தங்கி இருந்து மீன் பிடித்த மீனவர்கள், கரை திரும்பினார்கள். நேற்று காலை அவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்கள் ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர்.
மீன்கள் வரத்து அதிகரித்து இருந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க நேற்று காலையிலேயே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். அவர்கள் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.
அப்போது 15 கிலோ எடை கொண்ட திருக்கை மீன் ரூ.5 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், இறால், வவ்வால், சீலா போன்ற ஏராளமான மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுத்துச்சென்றனர்.
மீன்கள் வரத்து அதிகரிப்பால் நேற்று மீன்களின் விலை ஓரளவு குறைந்து இருந்தது. நடுக்கடலில் 15 நாட்களுக்கு மேல் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் இன்னும் கரை திரும்பி வரவில்லை.
இனி வரும் நாட்களில் மீன்களின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அப்போது மீன்களின் விலையும் மேலும் குறையும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story