90–ம் ஆண்டுகளிலேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரமான கல்வி குறித்து பாடம் நடத்தினேன் மந்திரி ஜி.டி.தேவேகவுடா சொல்கிறார்


90–ம் ஆண்டுகளிலேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரமான கல்வி குறித்து பாடம் நடத்தினேன் மந்திரி ஜி.டி.தேவேகவுடா சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Jun 2018 3:45 AM IST (Updated: 25 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

90–ம் ஆண்டுகளிலேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரமான கல்வி குறித்து பாடம் நடத்தினேன் என்று மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூற

பெங்களூரு, 

90–ம் ஆண்டுகளிலேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரமான கல்வி குறித்து பாடம் நடத்தினேன் என்று மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

பாடம் நடத்தினேன்

விவசாயிகளின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்றுள்ளேன். 90–ம் ஆண்டுகளிலேயே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தரமான கல்வி குறித்து பாடம் நடத்தினேன். எனக்கு 6 மாதங்கள் காலஅவகாசம் தாருங்கள். எனது திறமை என்ன என்பதை காட்டுகிறேன்.

நான் அதிகம் படிக்காமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை பாடம் எனக்கு நன்றாகவே தெரியும். நான் 8–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். ஆனால் எனக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டு இருப்பது குறித்து பரவலான விவாதங்கள் நடக்கிறது. நான் விவசாயி. அதனால் நான் விவசாயிகளுடன் இருந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கருதி வேறு இலாகாவை கேட்டேன்.

30 சதவீதம் பேர் மட்டுமே...

என்னை குமாரசாமி அழைத்து, இவ்வளவு நாட்கள் நீங்கள் விவசாயிகளுக்காக பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு கல்வி கற்கிறார்கள்.

ஆனால் நமது மாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் 30 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வியை படிக்கிறார்கள். இதை நீங்கள் அதிகரிக்க வேண்டும். அதனால் இந்த உயர்கல்வித்துறை பொறுப்பை ஏற்று பணியாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதனால் நான் உயர்கல்வித்துறையை ஏற்றுக்கொண்டேன்.

இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.


Next Story