ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு பழங்குடியினர் ஆஸ்பத்திரிகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு பழங்குடியினர் ஆஸ்பத்திரிகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
ஊட்டச்சத்து குறைபாட்டை கருத்தில் கொண்டு பழங்குடியினர் ஆஸ்பத்திரிகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
பழங்குடியினர் அதி களவில் வசிக்கும் மேல்காட், நந்துர்பர் உள்ளிட்ட பகுதி களில் பலர் ஊட்டச்சத்து குறைபா ட்டால் பாதிக்கப் பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய எண்ணிக்கையில் டாக்டர் களும் பணி அமர்த்தப்பட வில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் குல்கர்னி ஆகியோர் அடங் கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
காலிப்பணியிடங்களை நிரப்ப...
அப்போது அரசு தரப்பில் ஆஜரான மராட்டிய அட் வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி, ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்கும் பொருட்டு பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் சார்பில் அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆனால் இவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி களில் இருக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் களுக்கான காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்புமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story