தள்ளுபடி வதந்தி எதிரொலி; முத்ரா கடன் கேட்டு கலெக்டரின் காரை சூழ்ந்து நின்ற பெண்கள்


தள்ளுபடி வதந்தி எதிரொலி; முத்ரா கடன் கேட்டு கலெக்டரின் காரை சூழ்ந்து நின்ற பெண்கள்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் சிறப்பு திட்டமான முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக பரவிய வதந்தி எதிரொலியாக கடன் கேட்டு ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு கலெக்டரின் காரை சூழ்ந்து நின்றனர்.

ராமநாதபுரம்,

பிரதமரின் சிறப்பு திட்டங்களின் ஒன்றான இணை பிணையம் இல்லாத வங்கி கடன் வழங்கும் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வரு கிறது. பிணைய உத்தரவாதம் வழங்க தேவையில்லை என்பதால் ஏராளமானோர் தொழில் தொடங்கி சொந்த காலில் நிற்பதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்து கடன் பெற்று வ ருகின்றனர்.

இந்த திட்டம் குறித்து மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக நாள்தோறும் ஏராளமானோர் முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கக்கோரி மனு வழங்கி வருகின்றனர். நாள்தோறும் கடன் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்ரா கடன் திட்டத்தில் கடன் கேட்டு விண் ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து விசாரித்த போது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் முத்ரா கடன் திட்டத் தில் வழங்கப்பட்ட கடன்தொகையை ரத்து செய்ய உள்ளதாக வதந்தி பரவி வருவது தெரியவந்துள்ளது.

இதன் எதிரொலியாக வதந்தியை நம்பிய பொதுமக்கள் தங்களுக்கும் கடன் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 90 சதவீத மக்கள் முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கக் கோரி மனுகொடுத்தனர். முன்னதாக கலெக்டர் நடராஜன் வந்த போது அவரின் காரை சூழ்ந் து நின்ற பெண்கள் தங்களுக்கு உடனடியாக முத்ரா கடன் உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது கலெக்டர் நடராஜன், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைவ ருக்கும் பிணையில்லாமல் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் மனுக்களை அளித்தால் பரிசீலித்து கடன் வழங்கப்படும். தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு கூறினார்.


Next Story