கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பிச்சை எடுத்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கைகளில் தட்டு ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் பரஞ்ஜோதி, கருணாநிதி, அண்ணாமலை, அடைக்கலம், புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முதன்மை கோரிக்கையான வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட் டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் அரசாணை 56-ன் படி அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்பு குழுவினை கலைத்திடவேண்டும் என்ற கோரிக்கைகளைவலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கையில் தட்டு ஏந்தியபடி அருகில் உள்ள கடைகளிலும், அந்தவழியாக நடந்து சென்ற பொதுமக்களிடமும் பிச்சை எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story