மதுக்கடைகள் திறப்பதற்கு கண்டனம்: கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்த முயன்ற வாள்சண்டை வீரர் கைது
புதிதாக மதுக்கடைகள் திறக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முயன்ற வாள்சண்டை வீரரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்த வாள்சண்டை வீரர் டேவிட் ராஜ் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் வந்திருந்தனர். மதுவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி அனைவரும் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென டேவிட்ராஜ் தலைமையில் கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ‘கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை‘ என்று கூறி அவர்களை தடுத்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனைவரும் திடீரென கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஏராளமான மதுக்கடைகளை தமிழக அரசு மூடியது. ஆனால் அதன் பிறகு மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மீண்டும் மதுக்கடைகளை அரசு திறந்தது. இந்த நிலையில் வகை மாற்றம் செய்யப்பட்ட சாலையில் புதிதாக 800 மதுக்கடைகளை திறக்க முயற்சிகள் நடக்கின்றன.
இதே போல மேல்புறத்தில் ஒரு தனியார் பள்ளி அருகிலும் புதிதாக ஒரு மதுக்கடை திறக்க முயற்சி நடக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு மதுக்கடை திறக்கப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். புதிதாக எங்காவது மதுக்கடை திறக்கப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
மனு அளித்துவிட்டு டேவிட்ராஜ் உள்ளிட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றனர். அவர்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே சென்றதும் நேசமணிநகர் போலீசார் திடீரென டேவிட்ராஜை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தர்ணா போராட்டம் நடத்த முயன்றதால் டேவிட்ராஜை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருடன் வந்த பெண்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story