கவர்னரின் மிரட்டலுக்கு எதிர்க்கட்சிகள் பயப்படாது:ஜவாஹிருல்லா பேட்டி


கவர்னரின் மிரட்டலுக்கு எதிர்க்கட்சிகள் பயப்படாது:ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2018 4:01 AM IST (Updated: 26 Jun 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நெல்லை அபிஷேகப்பட்டியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டை,

7 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற கவர்னரின் மிரட்டலுக்கு எதிர்க்கட்சிகள் பயப்படாது என்று மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஹவாஹிருல்லா கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நெல்லை அபிஷேகப்பட்டியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் -சென்னை 8 வழி பசுமை சாலை என்ற பெயர் வினோதமாக உள்ளது. பசுமையை அழித்துவிட்டு அமைக்கப்படும் சாலை, எப்படி பசுமை வழி சாலை ஆகும். 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது போல் தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை உள்ளது.

கவர்னர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால் 7 ஆண்டு சிறை என்று கவர்னர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மிரட்டலுக்கு எதிர்க்கட்சிகள் பயந்து போகாது.

ரூ.750 கோடி

குட்கா போதை பொருள் ஊழலில் அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயர் அடிபடுகிறது. அதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பா.ஜனதா தலைவர் அமித்ஷா, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.750 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி உள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தீவிரவாதிகள் என்று கூறியது தவறு ஆகும்.

இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

பேட்டியின் போது த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன்சேட்கான், மனித நேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் உஸ்மான்கான், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் பிலால், பொருளாளர் சுல்தான் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story