எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 Jun 2018 2:00 AM IST (Updated: 26 Jun 2018 8:22 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

எட்டயபுரம், 

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை 

எட்டயபுரத்தில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இதன் அருகில் உள்ள நிலத்தை விளையாட்டு மைதானமாக மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில், அந்த விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கும் பணி தொடங்கியது.

இதற்கிடையே அந்த நிலமானது அரசு புறம்போக்கு நிலம் என்றும், அதனை பள்ளிக்கூட நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்ட ஏற்பாடு செய்து வருவதாகவும் என்று கூறி, அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோரிக்கை மனு 

அ.தி.மு.க. நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் குணசேகரன், எஸ்.டி.பி.ஐ. நகர செயலாளர் முனியராஜ், தி.மு.க. நகர செயலாளர் பாரதி கணேசன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ பெருமாள், லெனின்குமார், இளைஞர் பெருமன்ற தாலுகா தலைவர் அரிஹரசுதன், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், தாசில்தார் வதனாளிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், பள்ளிக்கூடம் அருகில் உள்ள நிலம் குறித்து ஆய்வு செய்யப்படும். அந்த நிலமானது அரசு புறம்போக்கு நிலம் என்று தெரிய வந்தால், அதில் அரசுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story