கோம்பைத்தொழு அருகே காட்டெருமையை வேட்டையாடிய 2 பேர் கைது
கோம்பைத்தொழு அருகே காட்டெருமையை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே வலம்புரி மலைப்பகுதியில் சிலர் காட்டெருமையை வேட்டையாடுவதாக மேகமலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேகமலை வனச்சரகர் குமரேசன் தலைமையில் வனவர் சோனைமுத்து உள்ளிட்ட வனத்துறையினர் வலம்புரி மலைப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது மலைப்பகுதியில் சிலர் சந்தேகப்படும் படி அமர்ந்திருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் சோதனை நடத்திய போது பையில் காட்டெருமை இறைச்சி இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து 2 பேரையும் மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 பேரும் கோம்பைத்தொழுவை சேர்ந்த கணேசன்(வயது 53), ராஜகோபால்(58) என்றும், நாய்களை வைத்து காட்டெருமையை வேட்டையாடியதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் காட்டெருமை வேட்டையாடப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது தோல் உரிக்கப்பட்டு இறைச்சி வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காட்டெருமை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான், காட்டெருமை உடலை பரிசோதனை செய்தார். அப்போது அவர், இறந்தது 4 வயது உள்ள ஆண் காட்டெருமை என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கணேசன், ராஜகோபாலை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே மயிலாடும்பாறை போலீசார் நாட்டுதுப்பாக்கி மூலம் காட்டெருமை வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story