அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறி வியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப் படுகிறது.
தாமரைக்குளம்,
அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
சிமெண்டு ஆலைகள் கொண்டு சுற்றுப்புற சூழல் பாதிப்புக்கு ஆளாகும் மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாலும், சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கில் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1998-ம் ஆண்டு முதுகலை சுற்றுச்சூழல் அறிவியியல் துறை தொடங்கப்பட்டு, இத்துறையின் மூலம் சுற்றுச் சூழல் தொடர்பான கருத்தரங்குகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் ஏற் படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும் சுற்றுச்சூழல் துறைக்கென இது நாள் வரை இளங்கலை படிப்பு தொடங்கப்படவில்லை என்பது வேதனை தரக்கூடிய விஷயமாக இருந்து வந்தது. சுற்றுப்புற சீர்கேட்டின் உச்சத்தில் செல்லும் அரியலூர் மாவட்டத்திற்கு சுற்று புறச்சூழல் சார்ந்த விழிப்புணர்வினை வளர்ந்து வரும் இளம் மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பு அரியலூர் அரசு கல்லூரியில் தொடங்க வேண்டும் என்பதுதான் இம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
இது தொடர்பாக அரசு தலைமை கொறடாவும், அரியலூர் எம்.எல்.ஏ.வுமான தாமரை ராஜேந்திரன், சட்டமன்றத்தில் பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். கொறடாவின் கோரிக்கை ஏற்ற தமிழக முதல்-அமைச்சர் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் ஜூலை 7-ந்தேதி வரை வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்பிக்க 7-ந்தேதியே கடைசி நாள். மாணவர்கள் தேர்வுக்கான கவுன்சிலிங் 9-ந் தேதி நடைபெறும். கவுன்சிலிங் அன்று மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story