திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி உறையூர் கீழசாயப்பட்டறை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவர் தனியார் ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராதா(வயது45). இத்தம்பதி நேற்று முன்தினம் காலையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே சென்றிருந்தனர். பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். வரும் வழியில் ஆனந்தராஜ் வேலைக்கு சென்று விட்டார். மனைவி ராதாவை தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இரவு நீண்டநேரமாகியும் கணவர் ஆனந்தராஜ் வீட்டுக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. உடனடியாக ராதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, சீக்கிரமாக வந்து விடுகிறேன் என ஆனந்தராஜ் கூறியதாக தெரிகிறது. எனவே, கணவர் வந்து விடுவார் என்பதால் கதவை சரியாக மூடாமல், திறந்து வைத்தபடியே ராதா தூங்க தொடங்கினார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன், திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த ராதா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான். அந்த நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தூக்க கலக்கத்தில் செய்வதறியாது ராதா திகைத்தார். பின்னர் வீட்டிற்கு கணவர் வந்ததும், அவருடன் சென்று திருச்சி உறையூர் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என விசாரித்தனர். அதற்கு அவர்கள், கேமரா எதுவும் பொருத்தப்பட வில்லை என கூறினர். இதனால், சங்கிலி பறிப்பு ஆசாமியை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் இணைந்து சி.சி.டி.வி.கேமரா பொருத்திடவும் போலீசார் அறிவுரை வழங்கினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமி குறித்து குடியிருப்பு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story