தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழக காவல்துறை மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல்படை ஆகியவற்றின் சார்பில் உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், கலால் உதவி ஆணையர் மல்லிகா, போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இந்த ஊர்வலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், சாரண-சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஊர்க்காவல் படையினர் திரளாக பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் போதை பொருட்களால் ஏற்படும் உடல்நல, மனநல பாதிப்புகள், போதை பழக்கத்திற்கு உள்ளாகும் தனிநபர்களால் குடும்பம், சமூகம் ஆகியவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தபடி சென்றனர்.
போதை பொருட்களை எதிர்த்து போராடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மற்றும் பேனர்களையும் கைகளில் ஏந்தி சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் போதை பொருட்களை தவிர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு ஊர்க்காவல்படை சார்பில் உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், ஊர்க்காவல் படையின் கோவை மண்டல தளபதி கவுசிக தேவ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை, ரவுண்டானா வழியாக பெரிய மாரியம்மன் கோவில் அருகில் நிறைவடைந்தது.
இதில் கிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைபொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டவாறும் சென்றனர். இதில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கல்லூரி தாளாளர் வள்ளிபெருமாள் மற்றும் ஊர்க்காவல் படையினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story