பிளாஸ்டிக் தடை நடிகை பூனம் பாண்டே சர்ச்சை கருத்து


பிளாஸ்டிக் தடை நடிகை பூனம் பாண்டே சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 27 Jun 2018 5:13 AM IST (Updated: 27 Jun 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசின் பிளாஸ்டிக் தடை குறித்து நடிகை பூனம் பாண்டே சர்ச்சை கருத்து தெரிவித்து உள்ளார்.

மும்பை,

இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர், இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும் தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் சர்ச்சை கருத்து தெரிவித்து உள்ளார்.

நடிகை பூனம் பாண்டே தனது டுவிட்டர் பதிவில், பிளாஸ்டிக் தடை எதற்காக செய்யப்பட்டது. யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ, அவர்கள் யாரும் சாலையில் சுற்றாதீர்கள். அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) உண்டா? என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நடிகையின் டுவிட்டர் பதிவுக்கு பலர் நகைச்சுவையாக வும், கிண்டலாகவும் பதில் தெரிவித்து உள்ளனர். 

Next Story