வேறு நபர்களின் வீடுகளை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது
வீடு குத்தகைக்கு விடுவதாக கூறி வேறு நபர்களின் வீடுகளை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 65). இவர் கடந்த ஆண்டு தேனாம்பேட்டையை சேர்ந்த சாந்தலிங்கம் என்பவரின் மனைவி பிரேமலதா (37) என்பவருக்கு ஒரு வீட்டை லீசுக்கு (குத்தகைக்கு) விடுவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்றார். பிறகு வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக சுதாகர் கூறினார். பிரேமலதாவுக்கு பணத்தை திரும்ப தராமல் இழுத்தடித்தார்.
இதுகுறித்து பிரேமலதா மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அப்போது பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக கூறிச்சென்ற சுதாகர், பணத்தை சொன்னபடி கொடுக்காமல் ஏமாற்றிவந்தார். இதனால் பிரேமலதா கோர்ட்டை அணுகினார். கோர்ட்டு பிரேமலதாவுக்கு ரூ.8 லட்சத்தை சுதாகர் உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதனால் நேற்று சுதாகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுதாகர் வீடு லீசுக்கு விடுவதாக கூறி ஆட்கள் யாரும் இல்லாத வீடுகளை காட்டி போலி பத்திரங்களை காண்பித்து வீடு கேட்டு வருபவர்களை ஏமாற்றி பலரிடம் பணம் பறித்துள்ளார்.
இதுபோலவே பிரேமலதாவுக்கு காட்டிய வீடும் சுதாகரின் சொந்த வீடு இல்லை எனவும், அது வேறு ஒருவரின் வீடு என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சுதாகருக்கு சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரியவந்தது, ஆனாலும் இவர் தனது வீடுகளை காட்டாமல், வேறு நபர்களின் வீடுகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
சுதாகரின் நாகரிக தோற்றம், சரளமான ஆங்கில பேச்சு, வசதியான வாழ்க்கை முறை ஆகியவற்றை பார்த்து பலரும் அவரிடம் ஏமாந்துள்ளனர். இவர் இதே முறையில் சென்னையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.40 லட்சத்தை ஏமாற்றியதும் தெரிந்தது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Tags :
Next Story