நாக்பூரில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர்


நாக்பூரில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர்
x
தினத்தந்தி 27 Jun 2018 5:21 AM IST (Updated: 27 Jun 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

நாக்பூரில் 47 ஆண்டுகளுக்கு பிறகு மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் 2-வது தலைநகரமாக நாக்பூர் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு சட்டசபை கூட்டத்தொடர் நாக்பூரில் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இங்கு மழைக்கால கூட்டத்தொடர் அரிதாகவே கூடுகிறது.

இந்தநிலையில் வரும் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரை நாக்பூரில் அடுத்த மாதம்(ஜூலை)4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதற்கு முன் கடைசியாக 1971-ம் ஆண்டு தான் நாக்பூரில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. 47 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு தற்போது தான் இங்கு மழைக்கால கூட்டத்தொடர் மீண்டும் கூட உள்ளது.

இதற்கு முன் 1961, 1966 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் 3 முறை நாக்பூரில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நடந்துள்ளது. எனவே தற்போது மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் 4-வது முறையாக நாக்பூரில் கூட உள்ளது.

விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் விதர்பா மண்டலத்தில் நாக்பூர் அமைந்துள்ளதால், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் பிரச்சினைகள் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story