கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் பரமேஸ்வர் சொல்கிறார்


கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் பரமேஸ்வர் சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Jun 2018 6:07 AM IST (Updated: 27 Jun 2018 6:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி வருகிற 5-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்று சித்தராமையா கூறியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர் கொரட்டகெரேயில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“கூட்டணி ஆட்சி குறித்து சித்தராமையா என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதனால் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். காங்கிரசின் மாநில தலைவராக உள்ள நான் இதை சொல்கிறேன். நான் சொல்வது தான் அதிகாரப்பூர்வமானது” என்றார். 

Next Story