கூட்டணி ஆட்சியை அவர்களே கவிழ்த்து விடுவார்கள் எடியூரப்பா பேட்டி
காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டணி ஆட்சியை அவர்களே கவிழ்த்து விடுவார்கள் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த குழப்பங்களின் லாபத்தை நாம் பெற வேண்டாம் என்று எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். வீதியில் இரு கட்சியினரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதன் மூலம் கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும். அதனால் இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு எப்படி வரும்?.
எக்காரணம் கொண்டும் நாங்கள் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அவர்களே கவிழ்த்துவிடுவார்கள். அகமதாபாத்துக்கு சென்று எங்கள் கட்சியின் தேசிய தலைவரை சந்தித்து பேசினேன். கட்சியை பலப்படுத்துவது குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். ஆனால் இதை ஊடகங்கள் வேறு விதமாக திரித்து கூறுகின்றன. சில எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைப்பது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான செய்தி கற்பனையானது. இதில் உண்மை இல்லை.
எந்த சூழ்நிலையிலும் கர்நாடக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்யாது. எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்பான முறையில் பணியாற்றுவோம். எங்கள் கட்சி ஆட்சி அமைக்காவிட்டாலும், மாநில மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டம் வருகிற 2-ந் தேதி தொடங்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அதற்கான அரசாணையை பிறப்பிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இதுவரை தகவல் வரவில்லை. ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். முதல்-மந்திரி குமாரசாமி ஒரு கருத்து சொல்கிறார். தர்மஸ்தலாவில் சித்தராமையா வேறு கருத்தை கூறுகிறார். இந்த கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை ஒரு மக்கள் நலத்திட்டத்தை கூட தொடங்கவில்லை.
அமித்ஷாவுடன் நாடாளுமன்ற தேர்தல், வருகிற 29-ந் தேதி நடைபெறும் கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் மற்றும் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Tags :
Next Story