தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2018 2:45 AM IST (Updated: 27 Jun 2018 6:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று மின்சார வாரிய மேற்பார்வை என்ஜினீயர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்செந்தூர் கோட்ட தலைவர் குன்னிமலையான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை கண்டறிந்து நிரந்தரம் செய்ய வேண்டும். நேரடியாக தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோ‌ஷம்

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. பாலசுப்பிரமணியன், ராமையா, சூசைராஜ், வெங்கடகிருஷ்ணன், யோவான் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story