கன்னிகைபேர் கிராமத்தில் சவுடு மண் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள பொதுப் பணித்துறை ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,

சவுடு மண் குவாரி
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில், தற்போது சவுடு மண் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ஏரியில் கடந்த 2013-ம் ஆண்டு சவுடு மண் குவாரியை தனிநபர் ஒருவர் நடத்தினார். ஏரியில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் இந்த ஏரியில் சீராக மழை நீர் தேங்க வில்லை. விவசாயத்துக்கு ஏரி பாசன நீர் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், வடமதுரை கிராமத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு சவுடு மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மண் எடுப்பதற்கு வசதியாக லாரிகள் சவுடு மண் குவாரிக்கு வந்து செல்ல வழியை ஏற்பாடு செய்தனர்.
தகவல் அறிந்த கன்னிகைபேர் கிராம பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கன்னிகைபேர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.
தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் போலீசார் மற்றும் கன்னிகைபேர் வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அதிகாரி லட்சுமி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சவுடு மண் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்தனர். பின்னர், இது சம்பந்தமாக சமரச பேச்சுவார்த்தை ஜூலை 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள பொது இடத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதில் சமரச முடிவு கிடைத்தால் குவாரியை இயக்கலாம். சமரச முடிவு கிடைக்காத பட்சத்தில் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது கிராமத்தின் நிலையை எடுத்து கூறலாம். அது வரையில் தற்காலிகமாக சவுடு மண் குவாரியை நிறுத்தி வைப்போம் என்று பொதுமக்களிடம் போலீசாரும், வருவாய்த்துறையினரும் கூறினர்.
இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும், வெட்டி எடுக்கப்பட்ட ஏரியின் கரையை மூடினால் தான் தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வெட்டி எடுக்கப்பட்ட ஏரியின் கரையை அதிகாரிகள் மூடினர். பின்னர் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story