துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வீரர்கள் பயிற்சியின்போது விவசாய நிலத்தில் குண்டு விழுந்து வெடித்ததா?
சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பாதுகாப்பு வீரர்கள் பயிற்சியின்போது விவசாய நிலத்தில் ஒரு குண்டு விழுந்து வெடித்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்,
துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பாதுகாப்பு வீரர்கள் பயிற்சியின்போது விவசாய நிலத்தில் ஒரு குண்டு விழுந்து வெடித்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் மத்திய, மாநில போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் வெடிகுண்டு வீசும் பயிற்சிகள் செய்வது வழக்கம்.
அதேபோல நேற்று மாலையும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வீரர்கள் வெடிகுண்டு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு வெடிகுண்டு பயிற்சி தளத்துக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தின் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே விவசாய நிலத்தில் வெடிகுண்டு விழுந்து வெடித்த இடத்தை பயிற்சி தளத்தின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இனிமேல் வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து அனுமந்தபுரம் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தின் அதிகாரிகள் பயிற்சி பெறும் வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story