காஞ்சீபுரம் அருகேடி ராக்டர் மீது லாரி மோதி 2 பேர் சாவு
காஞ்சீபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய வபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
லாரி மோதியது
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மாங்காய்களை ஏற்றி கொண்டு ஒரு டிராக்டர் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரம் அருகே சித்தேரிமேடு என்ற இடத்தில் டிராக்டர் வந்து கொண்டிருந்த போது, வேலூரில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு லாரி, டிராக்டரின் பின்னால் மோதியது.
இதில், டிராக்டரில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ரேணுகா (வயது 35), ஆந்திர மாநிலம் சித்தூர் கொட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (60) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
சாவு
இதில் ரேணுகா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் ஆபத்தான நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (30) என்பவரை கைது செய்தார்.

Related Tags :
Next Story