ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தடுக்க பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த நடவடிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் மாணவ-மாணவிகள் விடுதிகளில் நடந்த ஏராளமான முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம் என்றும், இவற்றை கட்டுப்படுத்த அந்த விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கி பேசினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தற்போது குமரி மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய, மாநில அரசு திட்டங்கள் முறையாக சென்று சேருகிறதா? கல்வி நிறுவனங்களில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் பணி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் பேசப்பட்டது.
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கிட்டதட்ட 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டறிந்துள்ளோம். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தற்போது, ஆயிரம் முதல் 1,500 ஏக்கர் வரையிலான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 70 ஏக்கர் நிலத்தை மீட்டு 60 பயனாளிகளுக்கு திருப்பி அளித்துள்ளோம்.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை 634 ஏக்கர் நிலத்தில், 78.56 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இது தொடர்பாக பெறப்பட்ட 2,631 புகார்கள் மீது ஜூலை இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் தற்போது 5 எஸ்.சி., எஸ்.டி., வழக்குகள் உள்ளன. இவற்றை விரைந்து விசாரித்து 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பட்டியலினத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகளிடம் வரும் 30-ந் தேதி வரை விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளோம். மீனவர்கள் தங்களை பட்டியல் இனத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு எந்தவொரு கோரிக்கையையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அது அரசின் கொள்கை முடிவு என்பதால், அவற்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்.
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக கேரளாவில் 155-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக 4 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் மாணவ-மாணவிகள் விடுதிகளில் நடந்த ஏராளமான முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம். இவற்றை கட்டுப்படுத்த அந்த விடுதிகளில் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது குறித்த அறிவிப்பை பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story