மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் மருத்துவமனை மேலாளர் உள்பட 2 பேர் பலி
திருமானூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தனியார் மருத்துவமனை மேலாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், வாழைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 61). கொத்தனார். இவரது மனைவி பானுமதி(52). இவர்கள் இருவரும் நேற்று காலை திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏலாக்குறிச்சி சாலையில் அவர்கள் சென்று .கொண்டிருந்தபோது, ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்த திருச்சி மாவட்டம் கல்லக்குடியை சேர்ந்த ஞானபிரகாசம்(45) என்பவர் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி சாலையில் ஆண்டவர் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு, நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் தனபால், ஞானபிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பானுமதியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனபால், ஞானபிரகாசம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story