பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊர்க்காவல் படை வீரர், தோழியுடன் பலி
ஒரத்தநாடு அருகே பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊர்க்காவல் படை வீரர், தோழியுடன் பலியானார்.
ஒரத்தநாடு,
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் கோமதிராஜன்(வயது 32). திருமணம் ஆகாத இவர், சென்னையில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் மனைவி ஆக்னஸ்(36). இவர், சென்னையில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது கோமதிராஜனுக்கும், ஆக்னஸ்சுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் பின்னர் ஆக்னஸ், திருப்பூருக்கு சென்று அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரியில் நடந்த ஆக்னஸ் உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதென ஆக்னசும், அவருடைய நண்பர் கோமதிராஜனும் பேசி முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன் தினம் நள்ளிரவில் பணியை முடித்து விட்டு கோமதிராஜன் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருச்சி வந்தார். அதே நேரத்தில் ஆக்னஸ், திருப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டு திருச்சிக்கு வந்துள்ளார்.
பின்னர் இவர்கள் இருவரும் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் கந்தர்வக்கோட்டை வழியாக பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். ஒரத்தநாட்டை அடுத்துள்ள வேப்பங்காடு அருகே சென்றபோது அதே சாலையில் எதிரே வந்த ஒரு தனியார் பஸ், கோமதிராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கோமதிராஜனும், அவருடன் வந்த பெண் தோழி ஆக்னசும் உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல் களை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹேமலதா வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் முத்துவை(38) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் பலியான ஆக்னஸ், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மகன் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story