நேற்று குற்றவாளி, இன்று பிரபலம்!
அமெரிக்காவில் குற்றவாளியாக அறியப்பட்டவர், இன்று மாடலாக வலம் வருகிறார்!
அமெரிக்காவின் வட கரோலினாவில் கடந்த ஆண்டு 20 வயதான மெக்கி அலான்ட் லக்கி, வாகனத்தைத் திருடிச் சென்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். குற்றவாளியாக அறியப்பட்டவர், இன்று மாடலாக வலம் வருகிறார்!
கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் லக்கி மீது பதிவு செய்யப்பட்டன. சிறை தண்டனையும் பெற்றார். அப்போது இவரது படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. லக்கியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. ஒரு கண் பழுப்பாகவும் இன்னொரு கண் நீலமாகவும் இருந்தது. அதனால் ‘சிறைப் பறவை’ என்று பெயரிட்டு, அவரது படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதைக் கவனித்த அட்லாண்டா மாடலிங் நிறுவனம், லக்கியைத் தங்களின் மாடலாக இருக்கும்படி அழைப்பு விடுத்தது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அட்லாண்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் லக்கி. இவரின் எதிர்மறையான பிரபலத்தை, நேர்மறையாக மாற்றிவிட்டது மாடலிங் துறை. இதுவரை 19 படங்களே வெளியிட்டிருக்கிறார். அதற்குள் இன்ஸ்டாகிராமில் 22 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். நிறைய மாடலிங் வாய்ப்பு வருவதால், லக்கியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது. நிம்மதியான வாழ்க்கையைத் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் நம்பர் ஒன் மாடலாக மாறிவிடுவாராம்.
Related Tags :
Next Story