கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் கதர் பொருட்கள் சிறப்பு விற்பனை முகாம்
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் கதர் பொருட்கள் சிறப்பு விற்பனை முகாம் தொடங்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் கதர் பொருட்கள் சிறப்பு விற்பனை முகாம் தொடங்கியது.
சிறப்பு விற்பனை முகாம்கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், கதர் பொருட்கள் சிறப்பு விற்பனை முகாம் நேற்று காலையில் தொடங்கியது. நகரசபை ஆணையாளர் அச்சையா தலைமை தாங்கி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். காதி கிராப்ட் கிளை மேலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். நெல்லை காதி கிராப்ட் மேற்பா£ர்வையாளர் தங்கசாமி, நகரசபை என்ஜினீயர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் அனைத்து தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற கதர் ஆடைகள், அசல் பட்டு நூலினாலும், தரமான ஜரிகையாலும் தயாரிக்கப்பட்ட கதர் பட்டு புடவைகள், இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தைகள், தலையணைகள், இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட சோப்புகள், இயற்கையான மருத்துவ குணம் வாய்ந்த மார்த்தாண்டம் தேன், சுக்கு காபி பவுடர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பதனீர் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
30 சதவீதம் தள்ளுபடிகதர் மற்றும் பட்டு ரகங்களின் விலையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் வாங்கும் கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 10 மாத தவணை முறையில் கடன் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது.