தூத்துக்குடி மாவட்டத்தில் 1,223 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தமிழ்நாடு அரசு பணிக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கும், வீட்டுக்கும் செல்வதற்கு வசதியாக வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2017–18–ம் ஆண்டில் 2 ஆயிரத்து 534 உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க திட்டமிடப்பட்டு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 370 பெண்களுக்கும், 12 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 453 பெண்களுக்கும், 19 பேரூராட்சிகளில் உள்ள 296 பெண்களுக்கும், கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள 104 பெண்களுக்கும் என மொத்தம் 1,223 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.