தொடர் மழையால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது: சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தவிப்பு
தொடர் மழையால் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. அருகில் செல்ல பாதை சரியில்லாததால் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர்.
மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வறட்சி நீங்கி பசுமை திரும்பி உள்ளது.
தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி உள்ளதுடன் ஆறுகளிலும் தண்ணீர் ஓட தொடங்கி உள்ளது. இதனால் மலைமாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் பெய்து வரும் மழையால் கல்லட்டி மலை பாதையில் உள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது. இதனை ஊட்டியில் இருந்து முதுமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் தொலை தூரத்திலிருந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதனிடையே நீர் வீழ்ச்சிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலை போதிய பராமரிப்பு இன்றி இருப்பதாலும் காட்சிமுனை பகுதி முட்புதர் சூழ்ந்து உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை அருகில் சென்று காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அங்கு நடைபாதையின் இருபுறமும் புதர்கள் வளர்ந்து உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கல்லட்டி நீர் வீழ்ச்சியை தமிழக சுற்றுலாத்துறை எடுத்து அங்கு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story