சுத்தம் செய்ய முயன்ற போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து துப்புரவு தொழிலாளி சாவு
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற துப்புரவு தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
கணபதி,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை காந்திபுரம் டாடாபாத் 9-வது வீதியில் தனியாருக்கு சொந்தமான 4 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளின் கழிவுநீர் தொட்டி நிரம்பி விட்டது. எனவே அதை சுத்தம் செய்ய கோவை மாநகராட்சி ஒப் பந்த துப்புரவு தொழிலாளர்கள் கணேஷ், ஆனந்த், மகேந்திரன் (வயது 34) ஆகிய 3 பேர் நேற்று காலை வரவழைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் 3 பேரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலையை தொடங்கினார்கள். இதற்காக கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்தனர். அப்போது மகேந்திரன் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டிக்குள் தலைக்குப்புற விழுந்து விட்டார். உடனே வெளியே நின்றிருந்த 2 பேரும் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மகேந்திரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான மகேந்திரனுக்கு கார்த்திகா (31) என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் பள்ளி விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தன்யா (9), அஸ்வின் (7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காளப்பட்டி சித்ராநகர் நேரு நகரில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், ரத்தினபுரி இன்ஸ் பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில், கழிவுநீர் தொட்டியின் மூடி திறந்ததும் துப்புரவு தொழிலாளி மகேந்திரன் தலைகுப்புற விழுந்ததால் தரைத் தளத்தில் தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் துர்நாற்றம் காரணமாக அவர் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்துள் ளனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், ‘பலியான மகேந்திரன் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், அவருடைய மனைவிக்கு கோவை மாநகராட்சி அல்லது தமிழக அரசில் நிரந்தர வேலைவாய்ப்பும் அளித்து உதவிட வேண்டும்’ என்றனர்.

Related Tags :
Next Story