மகளை கர்ப்பமாக்கிய வழக்கில்: தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை


மகளை கர்ப்பமாக்கிய வழக்கில்: தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Jun 2018 5:15 AM IST (Updated: 29 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர்,

காங்கேயம் அருகே மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஆலம்பாடி பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருடன் அவரது தாயார், 13 வயது மகள் ஆகியோர் வசித்து வந்தனர். மகள் தாராபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் வேறு ஒரு பெண்ணை வெல்டிங் தொழிலாளி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழி லாளியின் தாயார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக தொழிலாளியின் 2-வது மனைவி இருந்தார். இதற்கிடையில் கடந்த 15-2-2015 முதல் 19-7-2015 வரை மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை மிரட்டி அந்த தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும், இதனை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அந்த சிறுமி தாராபுரத்தில் உள்ள விடுதியில் சேர்க்கப்பட்டார். அவள் அங்கு இருந்தபடி பள்ளியில் தொடர்ந்து படித்து வந்தாள். இதற்கிடையே சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பள்ளி ஆசிரியை சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தார். அதனால் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த பாட்டி அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமியிடம் பாட்டி பலமுறை கேட்டும் கர்ப்பத்துக்கு காரணம் யார் என்று அவள் தெரிவிக்கவில்லை. இதனால் காங்கேயம் மகளிர் போலீசில் பாட்டி புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் கலையரசி அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது நடந்த விவரங்களை சிறுமி கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, குழந்தை களை பாலியல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) உள்பட 3 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் வீதம் என மொத்தம் 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனையும் விதித்தும், இந்த தண்டனை களை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித் தார். இதற்கிடையில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து சேலத்தில் உள்ள காப்பகத்தில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story