திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2018 5:30 AM IST (Updated: 29 Jun 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீ புரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர், காஞ்சீ புரம் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை, தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இழிவு படுத்தி பேசியதாக கூறி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சங்கர், எழில், விஸ்வநாதன், சுரேஷ், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் சுமோ சங்கர் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் ஜெகன் குமார் நன்றி கூறினார்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் முருகன், துணைத்தலைவர் பாலாஜி, ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை அமைப்புச்செயலாளர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், நாகராஜ், குருமூர்த்தி, தனசேகர், சதீஷ் மற்றும் பலர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அதற்கு முன் பா.ம.க. தொண்டர்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகத்தை அடைந்தனர். அங்கு தாசில்தார் ரவிசந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் நா.வெங்கடேசன், சமூக முன்னேற்ற சங்க செயலாளர் செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், திருவள்ளூர் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் வாசுதேவன், செஞ்சி குமார், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கிற பாலயோகி கலந்து கொண்டு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் விடையூர் கேசவன், திருவள்ளூர் நகர தலைவர் ரமேஷ், இளைஞரணி துணைத்தலைவர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. தலைவர் வ.உமாபதி தலைமை தாங்கினார். இதில் காஞ்சீபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி பெ.கமலம்மாள், மாநில துணைத்தலைவர் செந்தில்முதலியார், மாநில இளைஞரணி செயலாளர் மகேஷ்குமார், செவிலிமேடு செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு ராட்டினகிணறு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட வன்னியர் சங்க துணைத்தலைவர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்் செங்கல்பட்டு நகர பொறுப்பாளர்கள் அப்பு, ரவி, நாகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் இளந்தோப்பு வாசு, முன்னாள் நகர செயலாளர் புலிக்குடிவனம் ராஜேந்திரன், மறைமலைநகர் நகர செயலாளர் சரவணன், திருக்கச்சூர் வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். போராட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்பாட்டத்தில், திருத்தேரி கிளை துணை தலைவர் சீனு, புண்ணியக்கோட்டி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story