மண்ணிவாக்கத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை
மண்ணிவாக்கத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திபிரியா (வயது 33). இவர் மண்ணிவாக்கம் சண்முகா நகர் பகுதியில் மருந்துக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக சென்றார்.
அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதேபோல மண்ணிவாக்கம் திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் அதே பகுதியில் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை கடையை திறப்பதற்காக சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த மடிக்கணினி திருட்டு போனது தெரியவந்தது. இந்த 2 கடைகளில் திருட்டு குறித்து மண்ணிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story